About
அறிவியல் என்பது அறியும் முறைகளை அறிவு அடிப்படையில்
கூறுவது. அறிவியல் பாடம் அல்ல வாழ்க்கையின் ஓர்
அங்கம். இன்று அறிவியல் குறிப்பாக, விண்வெளி ஆய்வுகள்
நானோ தொழில் நுட்பம், மருத்துவம், உயிரி தொழில்
நுட்பம், கணிப்பொறி என பல்வேறு துறைகளில் தடம்
பதித்து நவீன அறிவியல் வளர்ச்சி என மேம்பட்ட
ஆய்வுகள்மூலம், பல: புதிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தி
வருகின்றது. 'இருப்பினும், இது போன்ற அரிய அறிவியல்
உண்மைகள் அடித்தட்டு மக்களுக்கும், குறிப்பாக,
கிராமப்புற மாணவச் செல்வங்களுக்கும் சென்றடைய
வேண்டும், பயன்பெற வேண்டும், இதன் மூலம் அறிவியல்
சிந்தனை பெருகி, நாடு வளம் காண வேண்டும் என்ற உயரிய
சமுதாய சிந்தனை நோக்கோடு அறிவுசார் சான்றோர் மக்களின்
துணையோடு, எளிய இனிய தமிழ்மொழியில் “வளரும் அறிவியல்”
அறிவியல் இதழ் தவழ்கின்றது. தவழும் குழந்தைக்கு வலிமை
சேர்த்து, ஒன்றிணைந்து செயல்படுவோம். இளைய
சமுதாயத்திற்கு அறிவியலின் மகத்துவத்தை உணர்த்தி நாடு
வளம் காண வழிவகுப்போம்.