டாக்டர் E.K.T. சிவகுமார் அவர்களைப் பற்றி

டாக்டர்.இ.கே.தி.சிவகுமார் திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் நல்லாசிரியர் விருதுப் பெற்ற டாக்டர்.இ.கே.திருவேங்கடம்-விஜயா தம்பதியனரின் மூத்த மகனாகப் பிறந்தவர்.  அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை பயின்று,

·         சென்னையில் டி.ஜி.வைணவக் கல்லூரியில் வேதியியல் துறையில் இளநிலைப்பட்டமும்

·         முதுகலைப்பட்டம் குருநானக் கல்லூரியிலும்

·         முனைவர் பட்ட ஆய்வினை மாநிலக்கல்லூரியில் மேற்கொண்டு சென்னை பல்கலைக்கழத்தால் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் துறை விஞ்ஞானியாக சிறப்பாக பணியாற்றிய இவரது அறிவியல் ஆய்வுப் பணிகளை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு இந்திய அளவில் அறிவியல் அறிஞர் – 2008 விருதினை புதுதில்லியில் உள்ள நேசா வழங்கி சிறப்பித்துள்ளது.

புகழ்மிகு சென்னை அண்ணா பல்கலைக்கழக நேனோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் 9 ஆண்டுகளாக பணியாற்றி, தற்போது செராமிக் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்  இவர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பங்கேற்றுள்ளார்.

கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் சீரியப் பங்கு வகித்துவரும் இவர் 500க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் அவற்றில்

·         புதுதில்லியில் உள்ள இந்திய வர்த்தக கழகத்தால் அன்னை தெரசா விருது’.

·         பயனெழுத்து படைப்பாளர் விருது’.

·         பாபாசி வழங்கிய சிறந்த சிறுவர்களுக்கான குழந்தை அறிவியல் எழுத்தாளர் விருது’.

·         டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது.

·         தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது’.

·         ஜப்பான் நாட்டு தூதரால் வழங்கப்பட்ட புகழ்மிக்க மீடியா கில்டு விருது’.

·         மாற்று திறனாளிகளுக்கான தன்னலமில்லா சேவைகளுக்காக சமூக சேவகர் விருது’.

·         மெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைதி ஆணையம் வழங்கிய மிகச்சிறந்த சமூக ஆர்வலர் 2017 விருது’.

·         24க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி மிகச்சிறந்த நூலாசரியர் விருது பெற்றவர்.

பல்வேறு தரப்பினாரால் பாராட்ட பெற்ற இவர் ல்வி மற்றும் சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல்,

·         ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிட மற்றும் மாற்றுத் திறனாளர் வாழ்வு மேம்படும் வகையில் கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ரோ) நல உதவி அறக்கட்டளையை 2007ல் துவக்கி எண்ணற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சேவையை செய்து வருகிறார்.

·         மேலும் இ.எஸ்.ஆர் பவுண்டேஷன் மூலம் அறிவியல் வளர்ச்சி மேம்பட வழிவகுக்கும் பணிகளை செய்து வருகிறார்.

·         பன்னாட்டு அளவில் பதிவு எண் பெற்ற தமிழில் வெளிவரும் வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர்.

·         தமிழுக்கு பெருமை சேர்க்கும் 1140 பக்கங்கள் கொண்ட உலகத் தமிழர் கலைக் களஞ்சியம் என்ற நூலின் பதிப்பு ஆசிரியர்.

இவர் உலக கல்வி கண்காட்சியின் (WEXPO 2020) ஆலோசகராக இடம் பெற்றிருப்பது இவரது ஆளுமைக்கும், உலகளாவிய தொடர்பிற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

தன்னலமில்லாமல் 32 ஆண்டுகளாக சமுதாயச் சேவையே வாழ்வின் நோக்கமாக கொண்டு செயல்படும் டாக்டர்.இ.கே.தி.சிவகுமார் அவர்களின் வாழ்வின் பயனத்தை சிகரத்தை நோக்கி இ.கே.தி.சிவகுமார் என்ற தமிழ் நூலும், A Scientist On a Social Mission என்ற ஆங்கில நூலும் உலகளவில் இவரது அறிவியல் மற்றும் சமூக சேவைகளை எடுத்து சொல்கிறது என்றால் அது மிகையாகாது.  இவரது அயராது உழைப்பால் உயர்ந்து நிற்கும் சாதனைச் சிகரமாய் திகழும் இவர் பிறருக்கு முன் மாதிhpயாய் திகழ்ந்து வருகின்றார் என்பது பெருமைக்குரியதாகும்.